வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அடக்கு முறையால் 3,500-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பின்னர் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
அந்த குழு ஆய்வு மேற்கொண்டு ஷேக் ஹசீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. அவரது ஆட்சி காலத்தில்தான் நாட்டில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும், அதில் 3,500-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.
வங்கதேசத்தில் கிளர்ச்சி எழுந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.