பூட்டானின் தேசிய தின விழாவில் விருந்தினராக ஈசா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கலந்துகொண்டார்.
பூட்டானில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் தேதி தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நடைபெற்ற விழாவில், மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் விருந்தினராக சத்குரு பங்கேற்றார்.
இது குறித்து சத்குரு பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “பூட்டான் மக்களுக்கு தேசிய தின நல்வாழ்த்துகள் எனவும், இந்த தருணத்தில் இங்கிருப்பது மிகப்பெரிய கௌரவம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பூட்டான் மக்களின் உபசரிப்பு மிகவும் நெகிழ்ச்சியடைய செய்ததாகவும் கூறியுள்ளார்.