தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சேதமடைந்த ஆற்றுபாலத்திற்கு பாஜகவினர் நினைவஞ்சலி செலுத்த வந்த நிலையில், போலீசார் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெருமழை பெய்தது. இதனால் முக்காணி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் சேதமடைந்த நிலையில், தற்போது வரை அந்தபாலம் சரிசெய்யப்படவில்லை.
இந்த நிலையில், அந்த பாலத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதாக கூறி பாஜகவினர் அங்கு வருகை தந்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.