வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக இந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 200 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர் நாடு தப்பி சென்றார்.
இதையடுத்து இடைக்கால அரசு பதவியேற்ற நிலையில், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு, இந்து அமைப்பின் முக்கிய நிர்வாகியான கிருஷ்ணா தாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் பதில் அளித்துள்ளார். அதில், வங்கதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக 2 ஆயிரத்து 200 வன்முறை சம்பவங்கள் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.