இத்தாலியில் மலிவு விலையில் வீடு : பழமையான வீடுகள் ரூ.87 மட்டுமே - சிறப்பு கட்டுரை!
Oct 28, 2025, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலியில் மலிவு விலையில் வீடு : பழமையான வீடுகள் ரூ.87 மட்டுமே – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 23, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க வீடுகள் வெறும் 80 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளன. எதற்காக இவ்வளவு மலிவான விலையில் வீடுகள் விற்கப்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. பெரும்பாலான மக்கள், தங்கள் முழு சேமிப்பையும் கொடுத்து வீடுகளை வாங்குகிறார்கள். மற்றொரு தரப்பினர் ஒரு வீட்டை வாங்கி விட்டு அதற்கான கடனை அடைக்க ஆயுள் முழுவதும் உழைக்கின்றனர். ஆனால், இத்தாலியில் மிகவும் மலிவான விலைக்கு வீடுகள் விற்கப்படுகின்றன. மலிவு விலை என்றால், ​​வெறும் 80 ரூபாய் இருந்தால் போதும், அங்கு ஒரு வீடு வாங்கி விடலாம்.

இத்தாலியின் சிறு நகரங்களில் வாழ்ந்த உள்ளூர் மக்கள், சிறந்த வாய்ப்புகளைத் தேடி பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். அதனால், பல ஆண்டுகளாக குடியிருக்காமல் பாழடைந்து, கைவிடப்பட்ட வீடுகள் நிறைய உள்ளன. இத்தாலியில் இப்படி, பல கிராமங்கள் ஆட்கள் இல்லாமல் பேய் நகரங்களாக மாறி வருகின்றன.

இதனால் சிறுநகரங்கள் பொலிவை இழந்து வருகின்றன. இதற்கு தீர்வாக அங்குள்ள வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அந்நகர நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இத்தாலியில் விற்கப்படும் மலிவு விலை வீடுகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற வீடுகளாகும். முதன்முதலாக 2019ஆம் ஆண்டு, இத்தாலியின் சம்பூகா டி சிசிலியா நகரத்தில், வீடு விற்பனை தொடங்கியது.

சிசிலியில் உள்ள சிறுநகரங்களில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான பாரம்பரியம் மிக்க வீடுகள் குறைந்த விலைக்கு ஏலத்தில் விடப்படுகின்றன. இந்த கைவிடப்பட்ட வீடுகளை வெறும் 85 ரூபாய்க்கு விற்பதாக சம்பூகா நகராட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பால், வெளிநாட்டு மக்களும், இத்தாலியில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், 2021 ஆம் ஆண்டு 170 ரூபாயாக இருந்த ஆரம்ப விலை, தற்போது 255 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிசிலியின் இந்த யுக்தியை பிற நகர நிர்வாகங்களுக்கு பின்பற்ற தொடங்கியுள்ளன. குறிப்பாக தெற்கு சிசிலியில் உள்ள பிவோனா நகராட்சி, சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பும் எவருக்கும் வரி விலக்கு என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது.

இத்தகைய வீடுகள் அதிக ஏலம் எடுத்தவருக்கு விற்கப்படுகிறது. ஏலம் குறித்த முழு விவரங்களும் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும், இத்தாலியில், ஒரு வீட்டை ஏலம் எடுப்பவர், வைப்புத் தொகையாக சுமார் 4.5 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும். ஏலத்தில் தோற்றால் இந்தத் தொகை திருப்பித் தரப்படும். ஏலத்தில் வெற்றி பெற்றால் இந்த தொகை தக்கவைக்கப்படும்.

வீட்டை ஏலத்துக்கு எடுத்தவர், மூன்று ஆண்டுகளுக்குள் ஏலம் எடுத்த வீட்டைப் புதுப்பிக்க வேண்டும், தவறினால், வைப்புத்தொகையை இழக்க நேரிடும். எனவே வீட்டை வாங்கியவர்கள், உடனடியாக வீட்டைப் புதுப்பித்து விடுகிறார்கள்.

இந்த ஏலங்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இத்தாலியில் வீடு வாங்குகிறார்கள். இதனால், உள்ளூர் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும், உள்ளூரில் அதிகப் படியான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

ஏலத்தின் மூலம்,இதுவரை, ஏறக்குறைய 21.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலாகி உள்ளதாக சிசிலியாவின் மேயர், தெரிவித்திருக்கிறார். இத்தாலியில் விற்பனைக்கு வரும் வீடுகள் பெரும்பாலும், நாட்டின் பாரம்பரிய அழகுடன் பல முற்றங்கள் மற்றும் இரும்பு பால்கனிகள் கொண்ட வசீகரமான அம்சங்களுடன் விளங்குகின்றன.

புதுப்பிக்கப்பட்ட வீட்டின் பால்கனியில் நின்று, ஒரு பக்கம் மலை, இன்னொரு பக்கம் கடல் என இயற்கை அழகை ரசித்தபடி ஒரு காபி குடிக்கும் அனுபவத்தைப் பெறவே , பலரும் இத்தாலியில் வீடு வாங்குகிறார்கள்

Tags: Sambuca di SiciliaItalyHistoric housesItaly low price housesaffordable houses sold
ShareTweetSendShare
Previous Post

தடுப்பணையால் தத்தளிக்கும் கிராமம்! : மக்களின் வேதனையை தீர்க்குமா அரசு?

Next Post

அரபு நாடுகளிலும் ஆதிக்கம்! : போட்டு தாக்கும் மோடி குவைத்தில் சாதித்து என்ன?

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies