தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கியவர் ஐயா கக்கன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அரசியலை, மக்களுக்குச் சேவை செய்யும் புனிதப் பணியாகக் கருதி, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த ஐயா கக்கன் அவர்கள் நினைவு தினம் இன்று.
தேச விடுதலைக்காகப் போராடியதோடு, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்து சமூகப் புரட்சி செய்தவர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவர். தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கிய ஐயா கக்கன் அவர்கள் நினைவைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.