நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டில் கல்வீச்சில் ஈடுபட்டு கைதான 6 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல் வீசி தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது சில நிபந்தனைகளுடன் நீதிபதி அவர்களுக்கு ஜாமின் வழங்கினார்.