விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வாகன நிறுத்துமிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் விலை உயர்ந்த வாகனங்கள் சேதமடைந்தன.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. நெருக்கடியான பகுதிகளில் வசித்துவரும் மக்கள் தங்கள் வாகனங்களை, இங்கு நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ராஜபாளையத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வாகன நிறுத்துமிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 10 சொகுசு கார்கள், 2 ஆட்டோக்கள் உள்பட 15க்கும் அதிகமான வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.