மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் செல்லும் ஆதியோகி ரத யாத்திரை விமரிசையாக தொடங்கியுள்ளது.
ஈஷாவில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையிலும் ஆதியோகி-யை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்யும் வகையிலும் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த ரத யாத்திரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்க உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ரதத்தை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மற்றும் தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.