மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன் பிடித்தபோது 350 கிலோ யானை திருக்கை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26-ம் தேதி 90 விசைப் படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர்களின் வலையில் 5 அடி அகலத்தில் 350 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன் இருந்தது.
இந்த யானை திருக்கை மீனை 19 ஆயிரம் ரூபாய்க்கு கேரள மீன் வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார். இதனால் பாம்பன் விசைப் படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.