மகா கும்பமேளாவிற்காக முழு வீச்சில் தயாராகி வரும் பிரயாக்ராஜ் நகரம்!
Oct 9, 2025, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகா கும்பமேளாவிற்காக முழு வீச்சில் தயாராகி வரும் பிரயாக்ராஜ் நகரம்!

Web Desk by Web Desk
Dec 30, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவின்போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், சுமார் 40 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசு சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கும்பமேளாவுக்கு வரும் பார்​வை​யாளர்​களைக் கவர்வதற்காக லேசர் நிகழ்ச்​சிகள் நடைபெற உள்ளன. 2 ஆயிரம் டிரோன்​கள் வானில் பறந்தபடி புராண ​காட்சிகளை லேசர் ஒளியில் காட்சிப்படுத்த உத்தரப்பிரதேச சுற்​றுலாத்துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைகளுக்காக இந்திய ராணுவம் முகாம்களை அமைத்துள்ளது.

வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் இங்கு பணியமர்த்தப்படவுள்ளனர்.

இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாகவும், இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்கும்போது, பிரிவினை மற்றும் வெறுப்பு உணர்வை ஒழிக்க உறுதியேற்போம் என்றும் குறிப்பிட்டார். மகா கும்பமேளா என்பது ஒற்றுமையின் அடையாளம் என்றும், இவ்விழா அனைவரும் சமம் என்பதை பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: upThe city of Prayagraj is gearing up for the Maha Kumbh Mela!
ShareTweetSendShare
Previous Post

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்! – ஒருவர் பலி!

Next Post

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

Related News

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies