அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவின் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்தது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் பல்கலைக் கழகத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மம்தா குமாரி, விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் தங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்தார். அதன் பின்னர், விசாரணை குறித்து விவரங்கள் அறிக்கையாக வெளியிடப்படும் என கூறினார்.