ஆந்திராவில் துணை முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போலி ஐபிஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சூரிய பிரகாஷ் என்பவர் ஐபிஎஸ் அதிகாரிபோல உடையணிந்து பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சூரிய பிரகாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.