அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும், ஆளுநரும் கலந்தாலோசனை செய்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக் கழகத்தில் விசாரணை நடத்தியது.
பின்னர், ஆளுநர் மாளிகையில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் ஆளுநரை சந்தித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.