புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமெரிக்காவில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அப்போது, தான் புற்றுநோயில் இருந்து குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விரைவில் படங்களில் நடிக்கவிருப்பதாக கூறிய சிவராஜ்குமார், இரட்டிப்பு சக்தியுடன் மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடனத்திலும், சண்டை காட்சிகளிலும், தோற்றத்திலும் முன்பை போலவே இருப்பேன் என்றும், உங்கள் ஆசீர்வாதம் இருக்கும்வரை நலமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்