பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனே நீடிக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலைபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞரணி தலைவர் விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணியுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார். பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் காவல்துறை செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும், செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.