தச்சங்குறிச்சியில் தொடங்கியது ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள், அடக்க முற்படும் வீரர்கள்!
Oct 10, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தச்சங்குறிச்சியில் தொடங்கியது ஜல்லிக்கட்டு – சீறிப்பாயும் காளைகள், அடக்க முற்படும் வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 10:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடப்பு  ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 -ஆம் தேதி வரை 120 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 30 -க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுப் போட்டிகள், 50 -க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. போட்டியில், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

750 மாடுகளும் 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மாடுபிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பிறகு  போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு விழா மேடையில், அமைச்சர்களுக்கு போடப்பட்ட நாற்காலியில் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.  இதனால், அந்த நபர்களை உடனே கீழே இறங்குமாறு  விழாக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் முன்னிலையில், இருதரப்பினர் தாக்கிக் கொண்டதால், போட்டியை காண வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags: Thachankurichifirst Jallikattupudukottai jallikattuதச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுமுதல் ஜல்லிக்கட்டுThachankurichi JallikattubullsManjuvirattubullfighters
Share
Tweet
SendShare
Previous Post

சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை – இந்திய மருத்துவ சேவை இயக்குனரகம் தகவல்!

Next Post

72 ஆடுகள், 1000 கிலோ இறைச்சி : கோயில் திருவிழாவில் 10,000 ஆண்களுக்கு கறி விருந்து!

Related News

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies