அமெரிக்க அதிபரின் மனைவியும், அந்நாட்டின் முதல் பெண்மணியுமான ஜில் பைடனுக்கு மதிப்பு வாய்ந்த பரிசளித்தவர்களில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் உள்பட முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டது.
அதில் கடந்த 2023-ல் பிரதமர் மோடியிடம் இருந்து ஜில் பைடன் பெற்ற பரிசுதான், அந்நாட்டு தலைவர்கள் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. 7.5 கேரட் கொண்ட இந்த வைரத்தின் இந்திய மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாய் ஆகும்.