தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கு அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டது கேலிக்கூத்து என எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 19 பேருக்கு சுதந்திரத்திற்கான பதக்கங்களை அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.
இதில், முதலீட்டாளரும் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் நிறுவனருமான ஜார்ஜ் சோரஸுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எலான் மஸ்க், ஜார்ஜ் சோரஸூக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார்.
மேலும், ஜார்ஜ் சோரஸ் தன்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக குடியரசு கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.