சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழாவையொட்டி, திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கடந்த 4 -ம் தேதி தொடங்கியது. திருத்தேரோட்ட விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில், விநாயகர், முருகர், நடராஜர், சிவகாம சுந்தரி தாயார் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் நான்குமட வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர்.
இதில் பங்கேற்ற பக்தர்கள், பக்தி கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நாளை அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருவாபரண அலங்காரத்தில் காட்சியளிப்பார். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.