பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாடும் விதமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் 14-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் 7 ஆயிரத்து 513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், 4 லட்சத்து 13 ஆயிரத்து 215 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாகவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.