தெலங்கானா மாநிலம் புவனகிரியில் உள்ள பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் பல பொருட்கள் சேதமடைந்தன.
புவனகிரி மாவட்ட பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் காஞ்சர்லா ராமகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சூறையாடினர்.
இதில் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்தன. மேலும், தமது பேச்சுக்கு ராமகிருஷ்ணா ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினருக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் ஹரிஸ் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.