லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்த நிலையில், அமெரிக்க வரலாற்றில் இது ஒரு பேரழிவு என டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ள டொனால்ட் டிரம்ப், லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் எந்த யோசனையும் இல்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், காட்டுத்தீயை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.