வாழப்பாடி அருகே வங்கா நரி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்கப்பட்டதால் கிராம மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பநாயக்கன்பாளையம் ரங்கனூர் ஆகிய கிராமங்களில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு வங்காநரி ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ள நிலையில், அதனை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மாரியம்மன் கோயிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கிராம மக்கள் இருக்கையில் அமராமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதனால், வனத்துறை மற்றும் காவல் துறையினர் அங்கிருந்து விரக்தியில் திருப்பிச் சென்றனர். மேலும், வங்கா நரி வனவிலங்கு அல்ல என்றும், வனவிலங்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.