ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி கோவில் தேர் இடம் பெற்றுள்ள சிறப்பு தபால் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்ற சிதம்பரத்திற்கு நிரந்தர முத்திரையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அஞ்சல் துறை கலை, பக்தி மற்றும் பாரம்பரியத்தின் பெருமை ஆகிய காலத்தால் அழியாத அடையாளமான சிதம்பரம் நடராஜர் கோயிலின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் நடராஜரின் கம்பீரமான உருவம் இடம்பெறுகிறது. வருடாந்திர கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் டி.நிர்மலா தேவி சிறப்பு உறையை வெளியிட்டார். நடராஜரின் நிரந்தர முத்திரை சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.