மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை வெற்றி வாகை சூடியது.
மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை வாடிவாசலை அதிரவைத்தது. மாடுபிடி வீரர்களை கதிகலங்க வைத்த இந்த காளை போட்டியில் வெற்றி வாகை சூடியது.