சென்னை அடுத்த ஆவடியில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பட்டாபிராம் பகுதியை சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முன்பகை காரணமாக இவர்கள் இருவருக்கும் மற்றொரு கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பல் அரிவாளால் இருவரையும் வெட்டிய நிலையில், சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கொலையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்தனர். மேலும், பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதனை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.