ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை வரைந்து, மணல் சிற்ப கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பூரி கடற்கரையின் மணல்பரப்பில் அவ்வப்போது சிற்பங்களை வரைந்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனாலட் ட்ரம்பின் உருவத்தை வரைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடற்கரை மணற்பரப்பில் ட்ரம்பின் உருவத்தை வரைந்து, அதில், “வெள்ளை மாளிகைக்கு வருக வருக” என குறிப்பிட்டுள்ளார். இந்த சிற்பத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.