மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன.
லாத்தூா் மாவட்டம் உத்கிா் நகரின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக காகங்கள் இறந்து கிடந்தன. இதையடுத்து அதிகாரிகள் காகங்களின் உடல் பாகங்களை போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில், பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.