கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனிடையே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலில், இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.