சிமெண்ட், ஸ்டீல் நிறுவனங்களிடையே நிலவும் ரகசிய கூட்டு, நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டீல் மற்றும் சிமெண்ட் தொழில் ஒரு சிலரின் கைகளில் உள்ளதாக தெரிவித்தார்.அவர்களுக்குள் நிலவும் ரகசிய கூட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பிரச்னையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஸ்டீல், சிமெண்ட் தொழில் துறைகள் முக்கியப் பங்காற்றுவதாக தெரிவித்த நிதின் கட்கரி, அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டணியாக செயல்படுவது போட்டித்தன்மைக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.