டெல்லியில் கடும் குளிர் நிலவி வருவதால் சாலையோரம் வசிப்பவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து காணப்படும் நிலையில், வீடுகளின்றி சாலையோரம் தங்கியிருக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இவர்களை குளிரில் இருந்து பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இதை தொடர்ந்து வீடுகளின்றி வசிக்கும் மக்கள் அனைவரும் அங்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.