மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் 90-வது பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் தை மாதத்தில் முனியாண்டி சுவாமி கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவையொட்டி, தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஒன்று கூடினர்.
வாண வேடிக்கைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் பெண்கள் தலையில் மலர் தட்டுக்களுடன் ஊர்வலாக சென்றனர். பின்னர், முனியாண்டி சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்து வணங்கினர்.
பக்தர்கள் சேவல்கள், ஆடுகள் ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு, 2 ஆயிரத்து 500 கிலோ அரிசியில், பிரியாணி சமைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
(ப்ரீத்)