போக்சோ வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம், இளைஞருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.