இமாச்சலப் பிரதேசத்தில் கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடி வளர்க்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்டவைகளுக்காக கஞ்சா செடி வளர்க்க கட்டுப்பாடுகளுடன் இமாச்சலப் பிரதேச அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அனுமதி பெற்ற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் எனவும், பொது மக்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், உத்தரகண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களை பின்பற்றி, மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.