துருக்கி ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்து தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் கார்டால்யா நகரில் குளிர்காலத்தையொட்டி இரு வாரங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள 12 அடுக்கு ஹோட்டலில் அளவுக்கு அதிகமானவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான விசாரணையின் பேரில் அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 14 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.