பத்ம பூஷன் விருது வென்ற நடிகர் அஜித்குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அஜித்-க்கு பத்ம பூஷன் விருது அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், லட்சக்கணக்கான இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் அஜித்குமார் எனவும் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல், பத்மஸ்ரீ விருதைப் பெறும் மதுரையைச் சேர்ந்த பிரபல பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.