புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குழந்தைகள் சாப்பிடக் கூடிய வேஃபர் பிஸ்கட்டில் புழுக்கள் நெளிந்த சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பிசானத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர், தனது குழந்தைகளுக்காக பெட்டிக்கடை ஒன்றில் இருந்து பிரபலமான நபாட்டி என்ற நிறுவனத்தின் வேஃபர் பிஸ்கட்டை வாங்கிச் சென்று கொடுத்துள்ளார். அதனை குழந்தைகள் பிரித்து பார்த்த போது புழுக்கள் நெளிந்து கொண்டிருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.