இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களுக்கு, பிப்ரவரி 5-ம் தேதி வரை சிறைக்காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25-ம் தேதி, மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 34 மீனவர்கள், மறுநாள் தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி அவர்களை கைது செய்ததுடன், மீனவர்களின் 3 விசைப் படகுகளையும் சிறை பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதி வரை சிறைக்காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.