மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகார் மாநிலம் வளர்ச்சி பெறும் வகையில், தற்போதைய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பதப்படுத்தலுக்கான தேசிய நிறுவனம் மற்றும் மேலாண்மை பயிலகம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிக அளவு உற்பத்தியாகும் தாமரை விதைகளுக்கான புதிய வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள ஐஐடி உள்கட்டமைப்பினை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மிதிலாஞ்சல் பகுதியில் 50,000 ஹெக்டேர் பயனடையும் வகையில் மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.