திமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால் ஏடிஜிபி-யாக இருந்தால் கூட கொலை மிரட்டல் தான் பதிலா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்-ஐ கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் துறையில் உள்ள ஊழல்களைச் சொன்னதற்கே, ஏடிஜிபியை கொலை செய்ய முயற்சிப்பது கீழ்த்தரமானது என பதிவிட்டுள்ள இபிஎஸ், இந்த செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால் ஏடிஜிபி-யாக இருந்தால் கூட கொலை மிரட்டல் தான் பதிலா? என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ், ஏடிஜிபி-க்கே பாதுகாப்பில்லாத ஆட்சியில் மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஏடிஜிபி கல்பனா நாயக்-க்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.