சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய விவகாரத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 25-ஆம் தேதி இரவில் சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை இளைஞர்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சந்துரு, சந்தோஷ், தமிழ் குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வரர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்கள் சென்ற காரை இளைஞர்கள் துரத்தியது தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை துரத்தியதும், மோதுவது போல் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. மேலும், தப்பிக்க முயன்ற பெண்களை வழிமறித்து நிற்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.