நெல்லை அருகே பட்டப்பகலில் கிராம ஊராட்சி உதவியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திள்ளது.
பழவூர் பகுதியை சேர்ந்த சங்கர், வள்ளியூர் அருகே வேப்பிலான்குளம் கிராம ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பெருங்குடி அருகே மறைந்திருந்த மர்ம நபர், சங்கரை கம்பால் தாக்கியதுடன், கத்தியால் சரமாரி வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி கொலையாளியை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் கிராம ஊராட்சி உதவியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.