தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பே சுமார் இரண்டாயிம் ஆண்டுகள் பழமையானது. இங்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடந்தது.
அப்போது கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.