நெல்லையின் பிரதான சுற்றுலா தலமான குதிரை வெட்டி மூடப்படுவதாக வனத்துறை அறிவித்திருப்பது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, காரையாறு, சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய சுற்றுலா தலங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலமான குதிரை வெட்டி பராமரிப்பு பணி காரணமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், மாஞ்சோலை, நாலு முக்கு ஆகியவற்றை போல குதிரை வெட்டியையும் நிரந்தரமாக மூட வனத்துறையினர் திட்டமிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.