ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, புனித மரியம்மை தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள புனித மரியம்மை தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது.
இதனால், 15 நிமிடத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பதிவு தொடந்தது. இதன் காரணமாக வாக்காளர்கள் 15 நிமிடத்திற்கு மேலாக காத்திருந்து வாக்களித்தனர்.