கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உதவியாளரின் கணவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வடக்கனந்தல் மேற்கு விஏஓ தமிழரசியை அவரது உதவியாளர் சங்கீதா அலுவலக அறையிலேயே வைத்து பூட்டிச் சென்ற வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சங்கீதாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தனது மனைவியை விஏஓ லஞ்சம் வாங்க சொல்லி மிரட்டியதாகவும், தவறினால் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என அச்சுறுத்தியதாகவும் கூறி, சங்கீதாவின் கணவர் பாண்டியன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.