சிவகாசியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நடிகர் அஜித்தின் படத்தை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ளார்.
சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக், இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவராவார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவரது படத்தை சூரிய ஒளி மூலமாக வரைந்து அசத்தியுள்ளார். மேலும், ஓவியத்தை முழுமையாக முடிக்க 6 நாட்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவித்தார்.