டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார்.
பிசிசிஐ சார்பில் சச்சின் டெண்டுல்கருக்கு அண்மையில் கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில்,குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார்.
அப்போது சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோரும் உடனிருந்தனர். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தாம் கையொப்பமிட்ட ஜெர்சியை குடியரசு தலைவருக்கு சச்சின் அன்பளிப்பாக வழங்கினார்.