சொமாட்டோ நிறுவனத்தின் பெயரை எடர்னல் என மாற்ற அந்நிறுவன நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோ, மும்பை பங்குச்சந்தை வாரியத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் பெயர் மாற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளிங்கிட் நிறுவனத்தை அந்நிறுவனம் கையகப்படுத்தியபோது சொமாட்டோ என்பதற்கு பதிலாக எடர்னல் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டதாக அதன் சிஇஓ தீபேந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கைப்பேசி ஆப்-பில் சொமாட்டோ என்ற பெயர்தான் தொடரும் என்றும், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.